நீச்சல் தடாகத்தில் மூழ்கி மாணவர் ஒருவர் உயிரிழப்பு!
6 view
வென்னப்புவ, பொரலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தலங்காவ பிரதேசத்தில் வசிக்கும் 14 வயதுடைய 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் வகுப்பு மாணவர்கள் 80 பேர் அந்த சுற்றுலாவிற்கு சென்றிருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவர்கள் குழு ஒன்று நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது, குறித்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடதக்கது.
The post நீச்சல் தடாகத்தில் மூழ்கி மாணவர் ஒருவர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீச்சல் தடாகத்தில் மூழ்கி மாணவர் ஒருவர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
