மதிப்பு மிக்க எர்த்ஷாட் விருதுகள் இளவரசர் வில்லியமால்ட வழங்கிவைப்பு!
6 view
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், எர்த்ஷாட் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வெற்றியாளர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் பாஸ்டனில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இளவரசர் வில்லியம் வெற்றியாளர்களை அறிவித்தார். இந்த விழாவின் போது வில்லியம் மற்றும் கேத்தரின் ஐந்து வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கினர். அவர்களுடன் பில்லி எலிஷ், அன்னி லெனாக்ஸ், எல்லி கோல்டிங், சோலி எக்ஸ் ஹாலே மற்றும் டேவிட் பெக்காம் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்துக் கொண்டனர். கென்யா, இந்தியா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் உள்ளவர்கள் இந்த விருதுகளை பெற்றுக்கொண்டனர். இளவரசர் வில்லியம், சர் டேவிட் அட்டன்பரோ, நடிகை கேட் பிளான்செட், கால்பந்தாட்ட வீரர் டானி ஆல்வ்ஸ், ஃபிஜியன் ஆர்வலர் எர்னஸ்ட் கிப்சன் மற்றும் பாடகி ஷகிரா ஆகியோர் அடங்கிய குழு 15 இறுதிப் போட்டியாளர்களின் பட்டியலிலிருந்து இந்த ஆண்டு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தது. இந்த விழாவில் உரையாற்றிய இளவரசர் வில்லியம், ‘நீங்கள் பார்த்த எர்த்ஷாட் தீர்வுகள் மூலம்…
The post மதிப்பு மிக்க எர்த்ஷாட் விருதுகள் இளவரசர் வில்லியமால்ட வழங்கிவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மதிப்பு மிக்க எர்த்ஷாட் விருதுகள் இளவரசர் வில்லியமால்ட வழங்கிவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
