மஹிந்த ராஜபக்க்ஷவின் நல்லாசி வேண்டி விசேட பூஜை வழிபாடு

6 view
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நல்லாசி வேண்டி பம்பலப்பிட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார் பழைய கதிரேசன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது. சர்வதேச இந்துமத பீடம் ஏற்பாட்டில் ஆலய தர்மகர்த்தா ராஜேந்திர செட்டியார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார். கெளரவ அதிதியாக இந்து கலாசார திணைக்கள பணிப்பாளர் வை.அனிருத், முன்னாள் ஜனாதிபதியின் இந்து சமய விவகார இணைப்பாளர் கலாநிதி இராாச்சந்திர பாபுசர்மா குருக்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன் அரசியல் பிரமுகர்கள், சமய தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர். சமய வழிபாட்டில் கலந்து கொண்டதன்பின் அல் நிர்வாகத்தினரால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார். ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பூஜை வழிபாடுகளை நடாத்தினார்.
The post மஹிந்த ராஜபக்க்ஷவின் நல்லாசி வேண்டி விசேட பூஜை வழிபாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース