உணவு பஞ்சத்தின் விளைவை இன்னும் சில காலத்தில் சுகாதார குறிகாட்டிகளில் அவதானிக்கலாம் – வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம்!

6 view
உணவு பஞ்சத்தின் விளைவை இன்னும் சில காலத்தில் சுகாதார குறிகாட்டிகளில் அவதானிக்கலாம் என தமிழரசுக்கட்சியின் செயலாளர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைத்து உரையாற்றும் போதோ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என பாதீடு தொடர்பாக பாராளுமன்றத்தில் கதைக்கும் அரசியல்வாதிகளும் மற்றும் நிபுணர்களும் கூறுகின்றனர். ஆனால் ஏற்கனவே இந்த நாட்டில் உணவுப் பஞ்சம் வந்துவிட்டது. இதன் தாக்கம் இன்னும் சில நாட்களில் மோசமாக தெரியக்கூடிய வாய்ப்புள்ளது. இதன்படி உணவு பணவீக்கம் 90 வீதமாக உள்ளது ,உலகத்திலேயே உணவு பணவீக்கம் கூடிய நாடுகளில் இலங்கை 6 ஆவது இடத்தில் உள்ளது. எனவே அரசாங்கம் நாட்டில் விவசாயம் தொடர்பான கொள்கை வகுப்பை மேற்கொள்ளும் போது அரசியலுக்காக இல்லாமல் மாவட்டங்களுக்கு ஏற்றவகையில் உருவாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
The post உணவு பஞ்சத்தின் விளைவை இன்னும் சில காலத்தில் சுகாதார குறிகாட்டிகளில் அவதானிக்கலாம் – வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース