கோ ஹோம் சைனா போராட்டத்ததை ஆரம்பிக்க நேரிடும் – சாணக்கியன் பகிரங்க எச்சரிக்கை!
8 view
கோ ஹோம் சைனா போராட்டத்ததை ஆரம்பிக்க நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘வனத்துறை மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாடுகளினால் வடக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும், நாடாளுமன்றத்திலும் உரையாற்றி இதுவரை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. கிழக்கு மாகாண அபிவிருத்தி குழு தலைவர் இவ்விடயத்தில் எம்முடன் இணங்குவார் என எதிர்பார்க்கிறோம். மட்டக்களப்பு மாவட்டம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் யானை மோதல் தாக்குதலினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை, வவுனத்தீவு, செங்கலடி மற்றும் கிரான் ஆகிய பிரதேசங்களிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்படுகிறார்கள், விளை நிலங்களுக்கு யானைகள் உட்புகுந்து பயிர்களை நாசம் செய்து,…
The post கோ ஹோம் சைனா போராட்டத்ததை ஆரம்பிக்க நேரிடும் – சாணக்கியன் பகிரங்க எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோ ஹோம் சைனா போராட்டத்ததை ஆரம்பிக்க நேரிடும் – சாணக்கியன் பகிரங்க எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
