கடுமையான கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கைவிடும் சீனா?
6 view
சீனா தனது கடுமையான கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என்பதற்கான சமிக்ஞைகள் வெளியாகியுள்ளன. பூஜ்ஜிய கொவிட் கொள்கை காரணமாக நாளாந்த வாழ்க்கை வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலேயே சீனா தனது கடும் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடும் என்பதற்கான சமிக்ஞைகள் வெளியாகியுள்ளன. கொவிட் கட்டுப்பாடு தொடர்பில் தனது நாடு புதிய நிலையையும் பணியையும் எதிர்கொண்டுள்ளது என சீனாவின் கொவிட் நடவடிக்கைகளிற்கு பொறுப்பான தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். ஒமிக்ரோனின் குறைந்துவரும் நச்சுத்தன்மை தடுப்பூசிசெலுத்துவது அதிகரிப்பது மற்றும் கொரோனா பெருந்தொற்று குறித்த பெருமளவு அனுபவம் போன்றவற்றினால் தொற்றுநோய் கட்டுப்பாடு புதிய கட்டத்தையும் பணியையும் எதிர்கொள்கின்றது என துணை பிரதமர் சன் சுன்லன் தெரிவித்துள்ளார். பூஜ்ஜிய கொவிட்கொள்கை காரணமாக ஏற்பட்ட இழப்புகள் பாதிப்புகள் தீவிரமடைந்ததை தொடர்ந்து சீனாவின் 19க்கும் மேற்பட்ட நகரங்களில் முன்னர் ஒருபோதும் இல்லாத ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ள நிலையிலேயே இவ்வாறான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீன கம்யுனிஸ்ட் கட்சியின் கொவிட் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் முக்கியமானவராக…
The post கடுமையான கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கைவிடும் சீனா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடுமையான கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கைவிடும் சீனா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
