சீனாவில் ஒரேநாளில் 34,000 பேருக்கு கொரோனா உறுதி
6 view
உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அங்கு 36,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 34,980 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 35,800 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், 4,233 பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறி இருப்பதாகவும் சீன…
The post சீனாவில் ஒரேநாளில் 34,000 பேருக்கு கொரோனா உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீனாவில் ஒரேநாளில் 34,000 பேருக்கு கொரோனா உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
