வலி.மேற்கில் வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு பயிர்கள் வழங்கி வைப்பு!
8 view
உள்ளூராட்சி சபைகளின் பெண் உறுப்பினர்களுக்கான மூலோபாய உதவித் திட்டம் C.D.L.G இன் கீழ் வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கான வீட்டுத்தோட்டப் பயிர்கள் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் வலி. மேற்கு பிரதேச சபையின் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. UNDP நிறுவனத்தின் 8 இலட்சம் ரூபா நிதி அனுசரணையில் 100 பயனாளிகளுக்கு, தலா 30 வீட்டுத்தோட்ட பயிர்கள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன. வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள், சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வலி. மேற்கு பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
The post வலி.மேற்கில் வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு பயிர்கள் வழங்கி வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வலி.மேற்கில் வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு பயிர்கள் வழங்கி வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
