யாழில் கருவுறுதல் பற்றிய விழிப்புணர்வு தினமும் நூல் வெளியீடும்!
27 view
யாழ்ப்பாணத்தில் கருவுறுதல் பற்றிய விழிப்புணர்வு தினமும் நூல் வெளியீடும் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட கூவர் அரங்கில் இன்று மதியம் 2 மணிக்கு இந்தநிகழ்வு நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சத்திர சிகிச்சைத் துறையும் பெண்நோயியல் மற்றும் மகப்பேற்றுத் துறையும் இணைந்து இந்நிகழ்வை நடத்தியது. இந்நிகழ்வின் போது வெளியிடப்பட்ட ‘குழந்தையின்மை விளக்கங்களும் தீர்வுகளும்’ என்ற நூலை வைத்தியர் பா. பாலகோபியுடன் இணைந்து வைத்தியர் சி.இரகுராமன் எழுதியுள்ளார். இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, மருத்துவ பீட பீடாதிபதி ரா.சுரேந்திரகுமாரன், செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி யாழ் மாவட்ட மேலதிக செயலாளர் ம.பிரதீபன், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், விரிவுரையாளர்கள், ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
The post யாழில் கருவுறுதல் பற்றிய விழிப்புணர்வு தினமும் நூல் வெளியீடும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் கருவுறுதல் பற்றிய விழிப்புணர்வு தினமும் நூல் வெளியீடும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
