ஒதியமலைப் படுகொலையின் 38ஆவது நினைவேந்தல்!
31 view
ஒதியமலைப் படுகொலையின் 38ஆவது நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 1984ஆம் ஆண்டு இதே நாளில், ஒதியமலைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. ஒதியமலை சனசமூக நிலைய வளாகத்திலுள்ள நினைவிடத்தில் இடம்பெற்ற நிகழ்வில், நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக் கற்களுக்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலிகளில் ஈடுபட்டனர். இதனையடுத்து அஞ்சலிக் கூட்டமொன்றும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், கனகையா தவராசா, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஜோன்சன் ஆகியோருடன் படுகொலை செய்யப்பட்டவர்களுடைய உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்
The post ஒதியமலைப் படுகொலையின் 38ஆவது நினைவேந்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒதியமலைப் படுகொலையின் 38ஆவது நினைவேந்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
