எதிர்காலத்தில் டொலருக்கு வீடுகளை விற்கும் திட்டம் அறிமுகம்!
6 view
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கடன் மீளப்பெறுதல் நவம்பர் மாதத்தில் 300 மில்லியனைத் தாண்டியுள்ளது… அடுத்த வருடமும் வருமானத்தை அதிகரிக்க திட்டங்கள் தயார்… இதற்கமைய, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை நவம்பர் மாதத்துடன் தொடர்புடைய கடன்களை மீளப்பெற்று சொத்துக்கள் மூலம் 303 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக அதன் தலைவர் திரு.ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கடன் மீளப்பெறுவது மிகவும் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். இதன்படி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அனைத்து மாவட்ட முகாமையாளர்களையும் கண்டிக்கு வரவழைத்து, மாதாந்தம் 300 மில்லியன் ரூபா கடன் தொகையை வசூலிக்கும் இலக்கு வழங்கப்பட்டதாக தலைவர் குறிப்பிட்டார். இதற்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.…
The post எதிர்காலத்தில் டொலருக்கு வீடுகளை விற்கும் திட்டம் அறிமுகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எதிர்காலத்தில் டொலருக்கு வீடுகளை விற்கும் திட்டம் அறிமுகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
