தியாகியின் பிறந்தநாள் – யாழில் மழையிலும் காத்திருக்கும் மக்கள்!
13 view
தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரனின் 71ஆவது பிறந்தநாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டமையால், நாவலர் வீதியில் உள்ள அவரது நிறுவனத்தின் முன்பாக பெருமளவான மக்கள் அதிகாலை முதல் குவிந்திருந்தனர். அதனால் நாவலர் வீதி ஊடான போக்குவரத்து தியாகி அறக்கொடை நிறுவனத்தின் முன்பாக முற்றாக தடைப்பட்டு காணப்பட்டது. கைக்குழந்தைகள் மற்றும் வயதானோர் , விசேட தேவைகள் உடையோர் , பெண் தலைமைத்துவ குடும்பத்தினர் என பெருமளவான மக்கள் குவிந்திருந்தனர். “தியாகியின் பிறந்தநாளை முன்னிட்டு உதவிகள் வழங்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளை நம்பி அதிகாலை 4 மணிக்கு முதலே வந்துட்டோம். பலர் வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்துள்ளார்கள். காலையிலையே வந்தமையால், வீட்டில் இன்றைய தினம் சமைக்க கூட வில்லை. அதனால் வீட்டில் உள்ளோர் இன்றைக்கு பட்டினி கிடக்கிறார்கள். நாமும் காலையில் இருந்து காத்திருப்பதனால் , பட்டினியுடன் தான் மழைக்குள் நனைந்தவாறும் இருக்கிறோம். மதியத்தை தாண்டியும் எமக்கான உதவிகள் கிடைக்கப்பெறவில்லை. பலர் கைக்குழந்தைகளை…
The post தியாகியின் பிறந்தநாள் – யாழில் மழையிலும் காத்திருக்கும் மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தியாகியின் பிறந்தநாள் – யாழில் மழையிலும் காத்திருக்கும் மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
