‘நீர்ப்பறவை’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக சீனு ராமசாமி அறிவிப்பு!
7 view
நீர்ப்பறவை வெளியாகி பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி அறிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் விஷ்ணு விஷால், சுனைனா, நந்திதா தாஸ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் நீர்ப்பறவை. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. மீனவ சமூகத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த காதல் கதைக்கு இரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தநிலையில், நீர்ப்பறவை பாகம் – 2 விரைவில் தொடங்கப்படும் என இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நீர்ப்பறவை பாகம் இரண்டு தொடங்கப்படும், நீர்ப்பறவை அதன் பத்தாண்டுகளில் தங்கள் இதயங்களில் கூடுகட்ட அனுமதித்த மக்களுக்கும், என் கலைப்பெருமக்களுக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் நீர்ப்பறவை பாகம் – 1இல் நடித்தவர்கள் தான் இந்தப் படத்திலும் இருப்பார்களா என்பது குறித்து தெரியவில்லை. அதுகுறித்த…
The post ‘நீர்ப்பறவை’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக சீனு ராமசாமி அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ‘நீர்ப்பறவை’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக சீனு ராமசாமி அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
