வெங்காயத்திற்கு ஏற்பட்ட சிக்கல் நிலை?
6 view
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (02) இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 200 முதல் 300 ரூபாவாக இருந்த நிலையில், இன்று 150 முதல் 170 ரூபா வரை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், ஒரு கிலோ உள்ளூர் சிவப்பு வெங்காயத்தின் மொத்த விலை நேற்றைய தினத்தை விட இன்று 340 ரூபாவிலிருந்து 500 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
The post வெங்காயத்திற்கு ஏற்பட்ட சிக்கல் நிலை? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெங்காயத்திற்கு ஏற்பட்ட சிக்கல் நிலை? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
