இலங்கையில் அநாதையான ரஷ்ய குழந்தை! – வெளியான மனதை உருக்கும் கதை
32 view
காலி – உனவட்டுன பகுதியில் நிர்க்கதிக்குள்ளான நிலையில் இருக்கும் ரஷ்ய நாட்டு குழந்தையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலியில் நேற்றைய தினம் ரயில் ஒன்றுடன், முச்சக்கரவண்டி ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில், ரஷ்ய நாட்டு பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்திருந்தனர். இவ்வாறு உயிரிழந்த ரஷ்ய நாட்டு பெண்ணின் மூன்று வயது குழந்தையே இவ்வாறு நிர்க்கதிக்குள்ளான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த பெண் மற்றும் அவரின் குழந்தை ஆகியோர் உனவட்டு பகுதியில் கடந்த சில தினங்களாக தங்கியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த குழந்தையை பாதுகாப்பு நிலையமொன்றில் நிறுத்தி விட்டு, வெளியில் சென்ற ரஷ்ய நாட்டு பெண், மீள பாதுகாப்பு நிலையத்தை நோக்கி வருகைத் தந்த சந்தர்ப்பத்திலேயே விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குழந்தை ரஷ்ய நாட்டு பிரஜைகளுக்கு இலங்கையில் உறவினர்கள் கிடையாது என தெரியவந்துள்ளது. இந்த நிலையில், இலங்கையிலுள்ள ரஷ்ய தூதரகத்தின் ஊடாக, அவரது உறவினரை தொடர்புக் கொள்ளும் வரை, குறித்த குழந்தையை பாதுகாப்பு மத்திய நிலையத்தில்…
The post இலங்கையில் அநாதையான ரஷ்ய குழந்தை! – வெளியான மனதை உருக்கும் கதை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் அநாதையான ரஷ்ய குழந்தை! – வெளியான மனதை உருக்கும் கதை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
