மனித மூளைக்குள் சிப்; விரைவில் பரிசோதனை – எலான் மஸ்க்
6 view
மனித மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி மனிதர்கள் மத்தியில் சோதனை செய்ய உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார். மனித மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி, அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். இந்த சோதனை தற்போது குரங்குகளிடம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் மனிதர்கள் மத்தியில் சோதனை செய்யப்பட உள்ளது. அதன்மூலம், மனதில் நினைப்பதை கணினி மூலம் செயல்படுத்த முடியும். இந்த பரிசோதனை முயற்சிக்கு தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, தங்களை அனுமதிக்குமாறு அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களிடம் தனது குழு கேட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மஸ்க் கூறினார். எலான் மஸ்கின் ஸ்டார்ட் அப் நிறுவனமான நியூராலிங்க் இதனை மேற்கொள்கிறது. இன்னும் 6 மாதங்களில் மனிதர்களிடம் நியூரோலிங்க் சோதனை தொடங்கும். நாங்கள் மனிதர்கள் மத்தியில் இந்த சோதனையை மேற்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம் என்று எலான் மஸ்க் தெரிவித்தார். இந்த சிப்…
The post மனித மூளைக்குள் சிப்; விரைவில் பரிசோதனை – எலான் மஸ்க் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மனித மூளைக்குள் சிப்; விரைவில் பரிசோதனை – எலான் மஸ்க் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
