'கோ ஹோம் சீனா' போராட்டத்தை தொடங்குவேன்- சபையில் எச்சரிக்கை விடுத்த தமிழ் எம்.பி!
6 view
நாடாளுமன்றில் இன்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வாவுக்கும் இடையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம், இன்று தமது உரையின்போது“சீனாவை வீட்டுக்கு போ” என்ற கோசத்துக்கு தலைமையேற்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தார். இதன்போதே இந்த வாதவிவாதங்கள் ஆரம்பமாகின. இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா உதவவில்லை என்றும் அதற்கு பதிலாக சீனா, தொடர்ந்தும் இலங்கையை கடன் பொறிக்குள் வைத்திருக்கவே முயற்சிப்பதாகவும் சாணக்கியன் குற்றம் சுமத்தினார். தாம் அண்மையில் இது தொடர்பில் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு, கொழும்பில் உள்ள சீனத்தூதரக பேச்சாளர், டுவிட்டரில் பதில் வழங்கியுள்ளார். இது, இலங்கை மக்களின் இறைமைக்கு எதிரான செயலாகும் என்று சாணக்கியன் குறிப்பிட்டார். எனவே சீனாவின் இந்த செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும். இதனை விடுத்து 22 மில்லியன் இலங்கை மக்களுக்கு நன்மை செய்யவேண்டுமானால், இலங்கைக்கு வழங்கியுள்ள கடனை ரத்துச்செய்யவேண்டும். அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியைப்…
The post 'கோ ஹோம் சீனா' போராட்டத்தை தொடங்குவேன்- சபையில் எச்சரிக்கை விடுத்த தமிழ் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'கோ ஹோம் சீனா' போராட்டத்தை தொடங்குவேன்- சபையில் எச்சரிக்கை விடுத்த தமிழ் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
