பொகவந்தலாவையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு!
12 view
பொகவந்தலாவைவில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் மக்கள் நடமாடும் இடத்தில், பெரிய சிறுத்தை ஒன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மின் பொறியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை பொகவந்தலாவையில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம், என பொகவந்தலாவை போலீசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த சிறுத்தையின் உடலில் இருந்து பற்கள், தோல், பாதம் என்பன அகற்றப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவருகிறது. நல்ல தண்ணி வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் பொகவந்தலாவை போலீசார் இணைந்து இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post பொகவந்தலாவையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொகவந்தலாவையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
