பிரித்தானிய சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தாய்வான் விஜயம்: சீனா கடும் கண்டனம்!
6 view
பிரித்தானிய சட்டமன்ற உறுப்பினர்கள் குழு தாய்வானுக்கு மேற்கொண்ட விஜயத்தை சீனா கடுமையாக கண்டனம் செய்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழு உறுப்பினர்கள் தாய்வானுக்கு மேற்கொண்டுள்ள பயணம் ஒரு சீனா கொள்கையின் அப்பட்டமான மீறல் என்று பிரித்தானியாவில் உள்ள சீனத் தூதரகம் வெளியிட்ட டுவிட்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரு சீனா கொள்கையை மீறும் எந்தவொரு நடவடிக்கையையும் நிறுத்தவும், சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்தவும், அதன் உறுதிப்பாட்டிற்கு இணங்குமாறு பிரித்தானியா தரப்பை சீனத் தரப்பு வலியுறுத்துகிறது. சீனாவின் நலன்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பிரித்தானிய தரப்பின் நகர்வுகள் சீனத் தரப்பிலிருந்து பலமான பதில்களை எதிர்கொள்ளும். தாய்வான் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்புவோருக்கு இந்த பயணம் தவறான சமிக்ஞையை அனுப்பியுள்ளது’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், சீன அறிக்கைக்கு பதிலளித்த குழுவின் தலைவர் அலிசியா கியர்ன்ஸ், ‘ஜனநாயகங்கள் ஒருவருக்கொருவர் உரையாடலில் ஈடுபடுவது முற்றிலும் சரியானது’…
The post பிரித்தானிய சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தாய்வான் விஜயம்: சீனா கடும் கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரித்தானிய சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தாய்வான் விஜயம்: சீனா கடும் கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
