மைத்திரி, மஹிந்தவின் ஊழியர்களுக்கான செலவுகள் குறித்து தகவல்
15 view
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தனிப்பட்ட ஊழியர்களுக்காக ஜனாதிபதி ஒதுக்கீட்டில் 43 வீதத்தையும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 57 வீதத்தை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம் வழங்கிய தகவலில் தெரியவந்துள்ளது. அந்தத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2010 முதல் 2014 வரை 630 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளதுடன், 2 ஆயிரத்து 578 தனியார் ஊழியர்களைப் பணிக்கமர்த்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆயிரத்து 317 தனிப்பட்ட ஊழியர்களைக் கொண்டிருந்ததுடன், 2015 முதல் 2019 வரை 850 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பதவியேற்ற இரண்டு ஜனாதிபதிகளும் தமது தனிப்பட்ட ஊழியர்களை பராமரிப்பதற்காக 1480 மில்லியன் ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம் வழங்கிய தகவலில் தெரியவந்துள்ளது. பொது நிதியை துஷ்பிரயோகம் செய்வதை தவிர்ப்பேன் என மீண்டும்…
The post மைத்திரி, மஹிந்தவின் ஊழியர்களுக்கான செலவுகள் குறித்து தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மைத்திரி, மஹிந்தவின் ஊழியர்களுக்கான செலவுகள் குறித்து தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
