கொழும்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
33 view
கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) 15 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று இரவு 10.00 மணி முதல் சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணி வரை இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 11, 12, 4, 13, 14 மற்றும் 15 ஆகிய இடங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் போதுமான தண்ணீரை முன்கூட்டியே சேகரிக்குமாறும் அந்தச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
The post கொழும்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
