காற்று மாசு தரக் குறியீட்டில் யாழ்ப்பாணத்திற்கு சிவப்பு எச்சரிக்கை!
6 view
இலங்கையில் காற்றில் தூசியின் அளவு சடுதியாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் காற்றின் மாசு அதிகமாக உள்ள மாவட்டங்களில் புத்தகம், யாழ்ப்பாணம் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. இலங்கையின் முக்கிய நகரப்புறங்களில் சுற்றுப்புற காற்றின் தரநிலை தொடர்பில் தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் நேற்று காலை விடுத்த அறிக்கையில் இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. காற்று மாசு தரக் குறியீட்டின் பிரகாரம் 24 மணி நேரத்தில் இருக்கக்கூடிய தூசு துகள்களின் அளவு ஒரு கன மீட்டரில் இருக்கக்கூடிய 50 மைக்ரோகிராம் அளவு ஆகும். இலங்கையின் மூன்று மாவட்டங்கள் காற்று தரக் குறியீட்டின் ஆரோக்கியமற்ற எச்சரிக்கை நிலைமையான சிவப்பு நிற தரக்குறியீட்டை பெற்றுள்ளது. இதன் பிரகாரம் புத்தளத்தில் காற்று மாசு தரக்குறியீடு 174 ஆக காணப்படுவதுடன், யாழ்ப்பாணத்தில் 171 மற்றும் பதுளையில் 160 ஆக காணப்படுகிறது. இவ்வாறு ஆரோக்கியமற்ற சிவப்பு எச்சரிக்கை நிலையின் போது மனிதர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதுடன்…
The post காற்று மாசு தரக் குறியீட்டில் யாழ்ப்பாணத்திற்கு சிவப்பு எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காற்று மாசு தரக் குறியீட்டில் யாழ்ப்பாணத்திற்கு சிவப்பு எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
