பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் போதைப்பொருள் விற்பனை!!
28 view
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளது. இந்த போதை பொருள் பாவனை மற்றும் விற்பனை, பாதுகாப்பு தரப்பினரது ஒத்துழைப்புடன் பாடசாலை மாணவர்களை இலக்காக கொண்டே நடத்தப்படுகிறது. இந்த விற்பனையை இல்லாது ஒழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா பயிர்செய்கையை செய்து, பிள்ளைகளை வளர்க்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (1) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் மகளிர் விவகாரங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 410 பில்லியன் ரூபா பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி அமைச்சுக்கு 232 பில்லியன் ரூபா மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, யுத்தம் ஏதும்…
The post பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் போதைப்பொருள் விற்பனை!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் போதைப்பொருள் விற்பனை!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
