சந்திரிகா செய்த மிகப் பெரிய முட்டாள் செயல் என்ன? – அவரே சொல்கின்றார்!
10 view
மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு நான் நடவடிக்கை எடுத்தமைதான் நான் செய்த மிகப் பெரிய முட்டாள்தனமான செயல்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். அமைச்சர் மஹிந்த அமரவீர – நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் சந்திரிகா அம்மையாரைச் சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் பற்றிப் பேசினர். அப்போது நான் செய்த முட்டாள்தனமான வேலை எதுவென்று தெரியுமா என்று அவர்களிடம் கேட்டார் சந்திரிகா. என்னவென்று ஆர்வமாகக் கேட்டார்கள் அவர்கள். “மைத்திரியை ஜனாதிபதியாக்குவதற்கு நான் நடவடிக்கை எடுத்தமைதான் நான் செய்த மிகப் பெரிய முட்டாள்தனமான செயல். அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நாசமாக்கி வருகின்றார். எனினும், அவருக்கு நான் உரிய நேரத்தில் தக்க பதிலடியை வழங்குவேன்” – என்று கூறினார் சந்திரிகா அம்மையார்.
The post சந்திரிகா செய்த மிகப் பெரிய முட்டாள் செயல் என்ன? – அவரே சொல்கின்றார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சந்திரிகா செய்த மிகப் பெரிய முட்டாள் செயல் என்ன? – அவரே சொல்கின்றார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
