மாவட்ட சபையே ரணிலின் திட்டம் என்னிடமும் அதைத்தான் கூறினார் – அம்பலப்படுத்துகின்றார் கஜேந்திரகுமார்!
6 view
‘மாகாண சபைகளையும், மாகாண மட்டத்திற்குரிய அதிகாரங்களையும் நிராகரித்து, அதை மாவட்ட மட்டத்திற்கு மாற்றும் மாவட்ட அபிவிருத்தி சபைகளைத்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொண்டு வரப் போகிறார். அதை அவர் ஏற்கனவே என்னிடம் நேரில் கூறியும் இருக்கிறார்.” – இவ்வாறு விடயத்தை போட்டு உடைத்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தமிழ் தேசிய கட்சிகளின் சந்திப்புக்கு மாவை சேனாதிராஜா விடுத்த அழைப்பைத் தான் ராகரித்திருக்கின்றமை பற்றியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தகவல் வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- “கடந்த செவ்வாயன்று நாடாளுமன்றில் வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பில், அமைச்சர்களுக்குக் கீழே இருக்கக்கூடிய விவாதங்களில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது இருக்கக்கூடிய மாவட்ட, மாகாண சபைகளைத் தாண்டி மாவட்ட மட்டத்திலே அதிகாரங்களைப் பரவலாக்கி, மாவட்ட மட்டத்தில் வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்றபோது, செலவுகளைக் குறைக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார். அவ்வேளை…
The post மாவட்ட சபையே ரணிலின் திட்டம் என்னிடமும் அதைத்தான் கூறினார் – அம்பலப்படுத்துகின்றார் கஜேந்திரகுமார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாவட்ட சபையே ரணிலின் திட்டம் என்னிடமும் அதைத்தான் கூறினார் – அம்பலப்படுத்துகின்றார் கஜேந்திரகுமார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
