இன்று முதல் இடியுடன் கூடிய மழை!
6 view
கொழும்பு, டிச. 2: 2022 டிசம்பர் 2 ஆம் திகதியில் இருந்து நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீஅளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மழை நிலைமை : புத்தளத்தில்…
The post இன்று முதல் இடியுடன் கூடிய மழை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்று முதல் இடியுடன் கூடிய மழை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
