.பாலை நிலம்' ஈழத்தின் முழு நீளத்திரைப்படம் திரைக்கு வருகின்றது.
13 view
யூட்சுகி இயக்கம், தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள ஈழத்து காவியமான ‘பாலைநிலம்’ திரைப்படமானது, எதிர்வரும் சனிக்கிழமை 03-12-2022/மாலை 6.30 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 04-12-2022/ காலை 10.30, மதியம் 2.30, மாலை 6.30 ஆகிய நேரங்களில் யாழ்ப்பாணத்தில் ராஜா திரையரங்கில் காட்சிபடுத்தப்படுகின்றது. முற்று முழுதாக ஈழத்து கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள ‘பாலைநிலம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஈழத்து திரைப்படங்கள் மக்களின் யுத்த அவலங்களை நீக்கம் செய்து கடந்து சென்றுவிட முடியாது. அந்தவகையில் யுத்தத்தின் கூர்மையை தாங்கிய எம்மக்களின் காயங்கள் ஆறியபோதும் யுத்தத்தின் வடுக்களுடன் பயணிப்பதை சித்தரிக்கின்றது. ‘பாலைநிலம்’ கதாநாயகனாக எம்.ஜி.ஆர். காந்தன் நடித்துள்ளார். இவர் புதியவன், ராசையாவின் ஒற்றைபனைமரம் படத்திலும் நடித்துள்ளார். அத்துடன் ஊடகத்துறையில் நீண்ட அனுபவத்தை கொண்டவர், கலைச்சுடர், கலைஇளவல் போன்ற விருதுகளை பெற்றவர். கதாநாயகியாக அபிரா நடித்திருக்கும் இத்திரைப்படம் யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியையும், யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியையும் பேசுகிறது. ‘பாலைநிலம்’; திரைப்படத்திற்கு பிரசாந்…
The post .பாலை நிலம்' ஈழத்தின் முழு நீளத்திரைப்படம் திரைக்கு வருகின்றது. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post .பாலை நிலம்' ஈழத்தின் முழு நீளத்திரைப்படம் திரைக்கு வருகின்றது. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
