கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளரின் இடமாற்றத்தை ஆட்சேபித்து சுகாதார அமைச்சருக்கு சிறீதரன் கடிதம்!

30 view
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றிய ந. சரவணபவனுக்கு வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்திற்கு தற்காலிக இணைப்பு வழங்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்து சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 22.11.2022 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில் கிளிநொச்சி கிருஸ்ணபுரம் தொற்று வைத்தியசாலையில் இடம்பெற்ற மோசடிகளுடன் நேரடியாக தொடர்புபட்ட எவருக்கும் எதிராக இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படாத, அதேவேளை திட்டமிட்டுப் பழிவாங்கும்  நோக்குடன் பக்கச்சார்பாக அவர் தண்டிக்கப்படுவதாகவே தோன்றுகிறது.  இது குறித்த உரிய விசாரணைகள் நடத்தப்பட்டால் ,அவர் அவரது திணைக்கள பணியாளர்கள் செய்த குற்றங்களுக்காக அவர்களது பணிப்பாளர் என்ற வகையிலேயே அவர் குற்றச்சாட்டினை எதிர்கொள்வது தெரியவரும்.  ஆகவே முறையான விசாரணைகள் மூலம், குற்றம் செய்த உத்தியோகத்தர்கள் நிரூபணமாகும் வரை, அவரை மீண்டும் கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்குமாறு குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண…
The post கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளரின் இடமாற்றத்தை ஆட்சேபித்து சுகாதார அமைச்சருக்கு சிறீதரன் கடிதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース