15 வயது சிறுமி துஷ்பிரயோகம்: தனியார் வகுப்பாசிரியர் கைது
38 view
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பன்னல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரான 24 வயதுடைய ஆசிரியரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சந்தேகநபர் குளியாபிட்டிய நீதவான் ரந்திக லக்மால் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய ஆசிரியர் தங்கொடுவ, வென்னபுவ, மாகந்துர போன்ற பல பிரதேசங்களில் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியர் ஆவார்.பன்னல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவரிடம் இருந்து பல கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட வட்ஸ்அப் குழுவில் குறித்த சிறுமியின் தொலைபேசி இலக்கத்தை இந்த ஆசிரியர் கண்டுபிடித்து அதன் மூலம் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. சந்தேகத்திற்குரிய குறித்த ஆசிரியர் சிறுமியுடன் காதல்…
The post 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்: தனியார் வகுப்பாசிரியர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்: தனியார் வகுப்பாசிரியர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
