இரட்டைக் கொலை வழக்கில் இரட்டை மரண தண்டனை வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு!
13 view
இந்தக் கொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்த குற்றத்திற்கு எதிரிக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. முதலாம் எதிரியின் சகோhதரரகிய இரண்டாம் எதிரி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்தத் தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வியாழனன்று வழங்கப்பட்டது. இந்தக் கொலைச்சம்பவம் தொடர்பில் எதிரிகள் கைது செய்யப்பட்டு முதலாம் எதிரியின் உடைமையில் இருந்து, கொலை செய்யப்பட்டவர்களின் தங்க ஆபரணங்கள் மற்றும் தொலைபேசிகள் என்பன பொலிசாரினால் கைப்பற்றப்பட்டன. முதலாம் எதிரி கொலையுண்டவர்களின் வீட்டில் வேலை செய்து வந்தவராவார். இறந்துபோன கணவருடன் இறுதியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட ஓரிடத்திற்கு வருமாறு எதிரி அழைத்ததையடுத்து, அங்கு சென்றபோதே கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் வீட்டில் வைத்து அவரது மனைவி கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்டவர்களின் கைவிரல்கள் துண்டிக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. துண்டாடப்பட்ட விரல்கள் சடலங்களின் அருகில் கண்டுபிடிக்கப்பட்டன. கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட கோடரி கிணற்றில் இருந்து பொலிசாரினால் கைப்பற்றப்பட்டது. கத்தி சடலத்தின் அருகில் இருந்து…
The post இரட்டைக் கொலை வழக்கில் இரட்டை மரண தண்டனை வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரட்டைக் கொலை வழக்கில் இரட்டை மரண தண்டனை வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
