மன்னாரில் எயிட்ஸ் நோய் ஏற்படுவதற்கு போதைப்பொருள் பாவனையே காரணம்-தக்ஸாயினி மகேந்திரநாதன்
6 view
மன்னார் மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளர்கள் உருவாகுவதற்கு அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையே காரணம் என பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தக்சாயினி மகேந்திரநாதன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் அவர் தெரிவிக்கையில் வடமாகாணத்தில் 137பேரும் , மன்னார் மாவட்டத்தில் 11 பேரும் எச் .ஐ .வி நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைப் பொருள் பாவனையும் ஆண்களுக்கிடையேயான பாலியல் தொடர்பு காரணமாக எச்.ஐ.வி .தொற்று ஏற்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதனைத் தடுக்கும் முகமாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவினர் இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் முகமாக பல்வேறுபட்ட மட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
The post மன்னாரில் எயிட்ஸ் நோய் ஏற்படுவதற்கு போதைப்பொருள் பாவனையே காரணம்-தக்ஸாயினி மகேந்திரநாதன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் எயிட்ஸ் நோய் ஏற்படுவதற்கு போதைப்பொருள் பாவனையே காரணம்-தக்ஸாயினி மகேந்திரநாதன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
