தொழிலதிபரின் ஒன்றரை கோடி ரூபா மோசடி : உக்ரேன் பிரஜைகள், பல்கலை மாணவர்கள் உட்பட எண்மர் கைது!
6 view
தொழிலதிபர் ஒருவரின் தனியார் வங்கியில் வைப்பிலிடப்பட்டிருந்த ஒரு கோடியே 37 இலட்சம் ரூபா பணம் மற்றும் கணினி என்பன தொழில்நுட்பம் மூலம் ரகசியமாக எடுத்து மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் கடந்த 24 ஆம் திகதி இரவு மூன்று மணி நேரத்துக்குள் இடம்பெற்றுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் உக்ரேன் பிரஜைகள் இருவர் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி பிரிவில் கல்வி கற்கும் 3 மாணவர்கள் உட்பட எண்மர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்களில் ஒருவரைத் தவிர ஏனையோரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே உத்தரவிட்டார். ஒருவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
The post தொழிலதிபரின் ஒன்றரை கோடி ரூபா மோசடி : உக்ரேன் பிரஜைகள், பல்கலை மாணவர்கள் உட்பட எண்மர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொழிலதிபரின் ஒன்றரை கோடி ரூபா மோசடி : உக்ரேன் பிரஜைகள், பல்கலை மாணவர்கள் உட்பட எண்மர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
