டிசம்பர் மாததில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை இலங்கை எதிர்பார்த்துள்ளது – ஹரீன் பெர்ணான்டோ
6 view
டிசம்பர் மாதம் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில் சுற்றுலா வலயங்களில் இரவு நேர மின் துண்டிப்பை தவிர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்காக, அதிக எண்ணிக்கையிலான ஹோட்டல்களில், முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கையில் 49 வலயங்கள் சுற்றுலா வலயங்களாக பெயரிட்டு வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். அவற்றில் இதுவரை 14 வலயங்கள் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பெயரிடப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்,
The post டிசம்பர் மாததில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை இலங்கை எதிர்பார்த்துள்ளது – ஹரீன் பெர்ணான்டோ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டிசம்பர் மாததில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை இலங்கை எதிர்பார்த்துள்ளது – ஹரீன் பெர்ணான்டோ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
