யாழில் காற்று மாசுபாடு அதிகரிப்பு ! சுவாச நோயாளிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
6 view
இலங்கையின் வளிமண்டலத்தில் தூசி துகள்களின் செறிவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய நகரங்களில் காற்று மாசுபாடு காணப்படுவதாக MULIPI இன் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்தார். கடந்த நவம்பர் மாதம் முதல் எதிர்வரும் மார்ச் மாதம் வரை இந்தியாவில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு இலங்கையையும் பாதிக்கும். நாட்டில் துகள்களின் செறிவு தற்போது நிர்ணயிக்கப்பட்ட மதிப்பை விட அதிக அளவை எட்டியுள்ளது. எனவே சுவாச நோயாளிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
The post யாழில் காற்று மாசுபாடு அதிகரிப்பு ! சுவாச நோயாளிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் காற்று மாசுபாடு அதிகரிப்பு ! சுவாச நோயாளிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
