பிள்ளைகள் கல்வியில் வீழ்ச்சி அடையாமல் பாதுகாக்க சில திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் – எம்.ஏ.சுமந்திரன்
31 view
நாட்டில் போர் முடிவடைந்த பிறகு போரின் தாக்கத்திலிருந்து மீண்டு எழுந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் தற்போது பொருளாதார வீழ்ச்சி நாடு பூராகவும் ஏற்பட்டுள்ளது.ஆனால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதற்கு முன்னதாக எங்களுடைய பிரதேசங்களில் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமை, இளைஞர்கள் படித்துவிட்டு வேலை வாய்ப்பு இன்றி காணப்படும் சூழ்நிலைகள் உள்ளடங்களாக இவ்வாறு பலவிதமான பிரச்சனைகள் இருந்து கொண்டே உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடக்கு கிழக்கு புனர்வாழ்வின் அமைப்பின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜான்சன் பிகிராடோ,வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன்,தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.…
The post பிள்ளைகள் கல்வியில் வீழ்ச்சி அடையாமல் பாதுகாக்க சில திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் – எம்.ஏ.சுமந்திரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிள்ளைகள் கல்வியில் வீழ்ச்சி அடையாமல் பாதுகாக்க சில திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் – எம்.ஏ.சுமந்திரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
