காரைதீவில் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருள் விற்பனை கண்காட்சி!
12 view
சேர்ச் போ கொமன்ட் கிறவுண்ட் (Search for Common Ground) நிறுவனத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்டத்தில் இயங்கிவரும் பாதிப்புற்ற பெண்கள் அரங்கமானது சமாதான நல்லிணக்க முயற்சிகளில் பெண்களை வலுப்படுத்தல் எனும் செயற்றிட்டத்தின் கீழான வெற்றியை பகிர்ந்து கொள்ளும் தெளிவூட்டல் கருத்தரங்கும் நன்றி பகிர்தலும் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருள் விற்பனை கண்காட்சியும் காரைதீவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றுமுன்தினம்(29) இடம்பெற்றது. வில்கிளப் தலைவிகளால் எழுதப்பட்ட முன்மொழிவுகளின் மூலம் பெற்றுக்கொண்ட நிதியை பயன்படுத்தி மேற்கொண்ட திட்;டங்களின் அடிப்படையில் பெற்றுக்கொண்ட வெற்றியின் விழாவாகவே இந்நிகழ்வு இடம்பெற்றது. பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நிகழ்வில் சேர்ச் போ கொமன்ட் கிறவுண்ட் நிறுவனத்தின் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கான பொது ஆலோசகர் நளினி ரெட்ணராஜா மற்றும் கிராமின் பௌண்டேசன் அமைப்பின் பெண்கள் பொருளாதார வலுவூட்டல்…
The post காரைதீவில் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருள் விற்பனை கண்காட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காரைதீவில் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருள் விற்பனை கண்காட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
