நாட்டின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான எவ்வித உறுதியான நிலைப்பாடும் சிங்கள ஆட்சியாளர்களிடமும் காணப்படவில்லை – சபா.குகதாஸ் குற்றச்சாட்டு!
6 view
சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற அமர்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,இனப்பிரச்சினைக்கு மாவட்ட சபையை தீர்வாக முன்வைக்கலாம் என்ற வகையில் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவர் கூறியதற்கு சற்று வித்தியாசமாக மாவட்ட அபிவிருத்தி குழுக்களை நியமிக்கலாம் என்றவாறு கூறியிருந்தார். இந்த இனப்பிரச்சனைக்கான தீர்வை வழங்குவதற்கு இந்த ஆட்சியாளர்களிடம் ஒரு ஒற்றுமையான நிலைப்பாடு இல்லை .அதேநேரம் தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாகவும் அவர்களின் அபிலாசைகளை தீர்க்கும் முகமாகவும், நாட்டில் ஒரு அமைதியான நிலையை ஏற்படுத்துவதற்கும் சிங்கள ஆட்சியாளர்கள் தரப்பிலும்,எதிர்க்கட்சி தரப்பிலும் ஒரு உறுதியான நிலைப்பாடு காணப்படவில்லை என முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்தார். நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.. அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,சர்வதேச ரீதியான அழுத்தங்களையும்,உள்நாட்டில் இருக்கின்ற பொருளாதார பிரச்சினையை அடிப்படையாக கொண்டு தமிழர் தரப்பினை பேச்சுவார்த்தைக்கு அழைத்துக்கொண்டு…
The post நாட்டின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான எவ்வித உறுதியான நிலைப்பாடும் சிங்கள ஆட்சியாளர்களிடமும் காணப்படவில்லை – சபா.குகதாஸ் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான எவ்வித உறுதியான நிலைப்பாடும் சிங்கள ஆட்சியாளர்களிடமும் காணப்படவில்லை – சபா.குகதாஸ் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
