யாழில் கல்விச் சமூகத்திற்கான விழிப்புணர்வு செயலமர்வு!
6 view
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றையதினம்(30) காலை 9 மணியளவில் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பொறுப்புகள்,தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரியின் கடமைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக தெளிவூட்டப்பட்டது. இந்நிகழ்வில் யாழ் மாவட்ட செயலாளர் க.மகேசன், யாழ் மாவட்ட மேலதிக செயலாளர் ம.பிரதீபன்,தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள், பொலிஸார், யாழ் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
The post யாழில் கல்விச் சமூகத்திற்கான விழிப்புணர்வு செயலமர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் கல்விச் சமூகத்திற்கான விழிப்புணர்வு செயலமர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
