வவுனியாவில் வயோதிபரை மோதிய வேகமாக வந்த மோட்டார் சைக்கில்!
24 view
வவுனியா குருமன்காடு பகுதியில் இன்று (30.11.2022) இரவு 8.30 மணியளவில் பாதையினை மாற முற்பட்ட வயோதிபரை வேகமாக வந்த மோட்டார் சைக்கில் மோதியதில் வயோதிபரை காயங்களுக்குள்ளாகியுள்ளார். மோட்டார் சைக்கிலில் குருமன்காடு பகுதியிலிருந்து காளிகோவில் வீதிக்கு மாறமுற்பட்ட வயோதிபர் மீது வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியுடாக சென்ற அதிக சிசி உடைய இரு மோட்டார் சைக்கில்கள் குறித்த வயோதிபரின் மோட்டார் சைக்கிலை மோதியுள்ளது . இவ் விபத்தில் வயோதிபர் காயங்களுக்குள்ளாகியிருந்தார் . குறித்த இரு மோட்டார் சைக்கிலும் அதிக வேகத்துடன் பயணித்தாகவும் அவர்களின் வேகமாக இவ் விபத்துக்கு காரணம் என தெரிவித்து விபத்து இடம்பெற்ற இடத்தில் ஒன்று கூடிய பொதுமக்களினால் பதட்ட நிலமை காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு வருகை தந்து வவுனியா போக்குவரத்து பொலிஸார் இரு மோட்டார் சைக்கிலையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
The post வவுனியாவில் வயோதிபரை மோதிய வேகமாக வந்த மோட்டார் சைக்கில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் வயோதிபரை மோதிய வேகமாக வந்த மோட்டார் சைக்கில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
