நல்லாட்சி கால நாடகம் அம்பலம் – விளாசுகின்றார் சரவணபவன்!
8 view
“நல்லாட்சி அரசின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசமைப்பு முயற்சியில் அப்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவும், அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசியல் விருப்புடன் பணியாற்றவில்லை என்பது அவர்களது இன்றைய ‘மாவட்ட சபை தீர்வு’ தொடர்பான கருத்தாடலிலிருந்து அம்பலமாகியுள்ளது.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாவட்ட சபை முறைமையை முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன பிரேரித்திருந்தார். அந்த முறைமையை செயற்படுத்தத் தயார் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் வெளியிட்ட ஊடக அறிக்கையில் முன்னாள் எம்.பி. சரவணபவன் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “நல்லாட்சி அரசின் காலத்தில் ஜனாதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து புதிய அரசமைப்பு முயற்சியை ஆரம்பித்திருந்தனர். இதன் ஆரம்ப அமர்வில் உரையாற்றிய மைத்திரிபால, சிங்கள மக்களுக்கு சமஷ்டி என்றால் பயம். வடக்கு மக்களுக்கு…
The post நல்லாட்சி கால நாடகம் அம்பலம் – விளாசுகின்றார் சரவணபவன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நல்லாட்சி கால நாடகம் அம்பலம் – விளாசுகின்றார் சரவணபவன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
