தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அனைவரும் முயற்சிக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன்
8 view
உணவில்லாத நாட்டில் மலசலகூடம் எதற்கு என்ற நோக்கில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் குற்றம்சுமத்தியுள்ளார். பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களின் வருமானத்திற்கான வழியை ஏற்படுத்தாது அவர்களிடம் இருந்து அதிக இலாபத்தை ஈட்டிக் கொள்வதற்கு தோட்ட நிறுவனங்களும் அரசாங்கமும் முயல்கின்றன. குடியுரிமை மாத்திரம் வழங்கிவிட்டால் போதும் என்ற சிந்தனையில் செயற்படாமல் அவர்களில் வாழ்வாதாரத்தை உயர்த்த அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
The post தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அனைவரும் முயற்சிக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அனைவரும் முயற்சிக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.