சுற்றுலா வலயங்களுக்கு விசேட மின்சார விநியோகம் !
15 view
டிசம்பர் மாதத்திற்கான இலங்கையின் சுற்றுலா வலயங்களுக்கான விசேட மின் சார விநியோகம் குறித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். இதன்படி, நாடளாவிய ரீதியில் பகலில் ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடமும் மின்வெட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை தொடரும். தெற்கு மற்றும் எல்ல சுற்றுலா வலயங்களுக்கு டிசம்பர் முதலாம் திகதி முதல் ஒரு மணித்தியால இரவு நேர மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், டிசெம்பர் 15ஆம் திகதி நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கியை தேசிய மின்வட்டத்துடன் இணைத்துக்கொள்ளப்படவுள்ளது. இதன் மூலம் அனைத்து சுற்றுலா வலயங்களுக்கும், இரவு வேளைகளில் மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும். அதேநேரம், நாடளாவிய ரீதியில் இரவு நேர மின்வெட்டு ஒரு மணி நேரம் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார். இதேவேளை, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது…
The post சுற்றுலா வலயங்களுக்கு விசேட மின்சார விநியோகம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுற்றுலா வலயங்களுக்கு விசேட மின்சார விநியோகம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
