கப்பல் விபத்தால் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிப்பு: சஜித்
6 view
இலங்கையின் கடல் எல்லையில் கடந்த மே 2021 இல் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து காரணமாக தீப்பற்றி எரிந்தமையால் கடலோர சுற்றுச்சூழல் அமைப்பிற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, நாட்டின் மேற்கு கடலோர பகுதியில் மீன்பிடித் தொழிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட மொத்த சேதத்திற்கு காப்புறுதி நிறுவனங்கள் ஓரளவு இழப்பீடு வழங்கியிருந்தாலும், இதுவரையில் பெறப்பட்ட இழப்பீடு தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தவறியுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (30) பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
The post கப்பல் விபத்தால் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிப்பு: சஜித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கப்பல் விபத்தால் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிப்பு: சஜித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
