மக்களுக்காக எந்த மட்டத்தில் இறங்கியும் 'தொழிற்சங்க' தாக்குதலை தொடுப்பதற்கு காங்கிரஸ் தயார். – பாரத் அருள்சாமி தெரிவிப்பு
7 view
” இலங்கை தொழிலாளர் காங்கிரஸை அச்சுறுத்தல்கள் மூலம் அடிபணிய வைக்கமுடியாது. அது வெறும் பகல் கனவு மாத்திரமே, மக்களுக்காக எந்த மட்டத்தில் இறங்கியும் – அதாவது 8 அடி அல்ல 64 அடி பாய்ந்தேனும் ‘அரசியல்’, ‘தொழிற்சங்க’ தாக்குதலை தொடுப்பதற்கு காங்கிரஸ் தயார்.” என இவ்வாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரான பாரத் அருள்சாமி சூளுரைத்துள்ளார். அத்துடன், இ.தொ.காவின் உயர்மட்ட குழுவினர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விரைவில் சந்திக்கவுள்ளனர் எனவும், இதன்போது மலையக மக்கள் தொடர்பில் முக்கியமான கோரிக்கைகள் முன்வைக்கப்படும் எனவும் அவர் கூறினார். ஹற்றனில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, சமகால அரசியல் மற்றும் தொழிற்சங்க விவகாரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே பாரத் அருள்சாமி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ” நாட்டில் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் அதிகரித்துள்ளது. உலகில் உணவுக்கான பணவீக்க பட்டியலில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளது. அதேபோல மருந்து தட்டுப்பாடும் நிலவுகின்றது. இவ்விரு பிரச்சினைகளும் மலையகத்தில் பெரும்…
The post மக்களுக்காக எந்த மட்டத்தில் இறங்கியும் 'தொழிற்சங்க' தாக்குதலை தொடுப்பதற்கு காங்கிரஸ் தயார். – பாரத் அருள்சாமி தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களுக்காக எந்த மட்டத்தில் இறங்கியும் 'தொழிற்சங்க' தாக்குதலை தொடுப்பதற்கு காங்கிரஸ் தயார். – பாரத் அருள்சாமி தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
