தெற்காசிய கராத்தே போட்டியில் சாதனை படைத்த மட்டு வீரருக்கு கௌரவம்!
6 view
வடக்கு கிழக்கின் வரலாற்றில் முதன்முறையாக தெற்காசிய குமித்தே கராத்தே போட்டியில் வெள்ளப்பதக்கத்தினைப்பெற்று இலங்கைக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமைசேர்ந்த மட்டக்களப்பு ஜேகோமோ கழகத்தின் வீரர் ஆர்.துஷ்யந்தனுக்கு இன்று காலை மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் வைத்து வரவேற்பளிக்கப்பட்டது. தெற்காசிய கராத்தே போட்டியில் இலங்கை சார்பில் பங்குகொண்ட மட்டக்களப்பு ஜேகோமோ கழகத்தின் வீரர் ஆர். துஷியந்தன் வெள்ளிப்பதக்கம் பெற்று இலங்கைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் சேர்த்திருந்தார்.ஆறாவது தெற்காசிய குமித்தே கராத்தே சுற்றுப்போட்டி இலங்கையில் நடைபெற்றது. இதில் இந்தியா, பூட்டான், பாகிஸ்தான், பங்களாதேஸ், நேபாள்,இலங்கை ஆகிய ஆறு நாடுகள் பங்குகொண்டன. இந்த சுற்றுப்போட்டியில் இலங்கையினை பிரதிநிதித்துவப்படுத்தி மட்டக்களப்பு ஜேகோமோ கழகத்தின் சார்பில் பங்குகொண்ட துஸ்யந்தன் 55கிலோவுக்குட்பட்ட 20வயதுக்குட்பட்டவர்களுக்கான குமித்தே கராத்தே போட்டியில் வெள்ளிப்பத்தக்கதை பெற்றுக்கொண்டார். இந்தியாவுடனான இறுதிப்போட்டியில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இரண்டாம் நிலைக்கு சென்று வெள்ளிப்பதக்கத்தினை பெற்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமைசேர்த்திருந்தார்.இவர் இன்று மட்டக்களப்புக்கு வருகை தந்தபோது மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் வைத்து மட்டக்களப்பு மாநகரசபை…
The post தெற்காசிய கராத்தே போட்டியில் சாதனை படைத்த மட்டு வீரருக்கு கௌரவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தெற்காசிய கராத்தே போட்டியில் சாதனை படைத்த மட்டு வீரருக்கு கௌரவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
