48,500 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் புத்துயிர் பெற்ற கொடிய ஜாம்பி வைரஸ் – ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
6 view
ரஷ்யாவில் இதுவரை உறைந்த ஏரியின் அடியில் புதைந்திருந்த 48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸை பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில், ‘ஜாம்பி வைரஸ்’ மூலம் மேலும் ஒரு தொற்றுநோய் குறித்த அச்சத்தை ஆய்வாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர். ‘பழங்கால அறியப்படாத வைரஸின் புத்துயிரால் தாவரங்கள், விலங்குகள் அல்லது மனித நோய்களின் விடயத்தில் நிலைமை மிகவும் பேரழிவு தரும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றும் காரணமாக பல ஆயிரம் ஆண்டுகளாக நிரந்தரமாக உறைந்திருந்த இந்த ஏரி உருகியுள்ள நிலையில், இதில் புதிய வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளன. பருவநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் வேகமாக உருகும் நிலையில் திடீரென வைரஸ் தொற்று பரவினால், ஆபத்து அதிகம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சைபீரியா பகுதியில் உள்ள பெர்மாஃப்ரோஸ்டிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பிரான்ஸ் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் 13 வகை வைரஸ்களுக்கு புத்துயிர் அளித்துள்ள நிலையில்,…
The post 48,500 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் புத்துயிர் பெற்ற கொடிய ஜாம்பி வைரஸ் – ஆய்வாளர்கள் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 48,500 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் புத்துயிர் பெற்ற கொடிய ஜாம்பி வைரஸ் – ஆய்வாளர்கள் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
