காலநிலை மாற்றம் பயங்கரவாதத்தைப் போலவே நவீன உலகிற்கு மிகவும் அச்சுறுத்தல்! ஜனாதிபதி
6 view
காலநிலை மாற்றத்திற்கு பயனுள்ள தீர்வுகளை வழங்கக்கூடிய நாடுகள், நேரடியாக தலையிடாவிட்டால் மனித குலத்தின் எதிர்கால இருப்பை அச்சுறுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். COP27 உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது, “எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மனிதன் – காலநிலை மாற்றம் எனும் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக உலகத் தலைவர்கள் கடந்த 27 ஆண்டுகளாக கொப் கட்டமைப்பின் கீழ் கூடிவருகின்றனர். எனினும், கொப் செயன்முறையின் கீழ் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய உலகளாவிய மற்றும் கூட்டுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் இன்னும் தயாராக இல்லை. கொப் 27 இல் எட்டப்பட்ட முடிவுகள் துன்பத்திலிருந்து நாடுகளை விடுவித்து ஒரு முற்போக்கான நிலையில் வைக்க மீண்டும் தவறிவிட்டன. அரசியல்மயமாக்கல் மற்றும் காலதாமதம் ஆகியனவே வெற்றிக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது கவலைலக்குரிய விடயமாகும். உச்சிமாநாட்டின் இறுதி முடிவு ஊக்கத்தை இழப்பதாக அமைந்துள்ளது. மிகப்பெரிய சேதத்திற்கு வரலாற்று…
The post காலநிலை மாற்றம் பயங்கரவாதத்தைப் போலவே நவீன உலகிற்கு மிகவும் அச்சுறுத்தல்! ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலநிலை மாற்றம் பயங்கரவாதத்தைப் போலவே நவீன உலகிற்கு மிகவும் அச்சுறுத்தல்! ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
