பாடசாலைகளில் பாலியல் துன்புறுத்தலை தடுக்க குழு – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
6 view
பாடசாலைகளில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக முறைப்பாடு அளிக்க குழுவை அமைக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்படுவதை தடுக்கும் சட்டப்படி, பாலியல் துன்புறுத்தல் முறைப்பாடு தெரிவிக்க அவசர எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த எண் அனைத்து பாடசாலை பாடப் புத்தகங்களிலும் அச்சிடப்படும் என்றும் அதிலிருந்து வரும் அழைப்புகளை கையாள குழு அமைக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
The post பாடசாலைகளில் பாலியல் துன்புறுத்தலை தடுக்க குழு – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலைகளில் பாலியல் துன்புறுத்தலை தடுக்க குழு – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
