மகள்களையும், மகனையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை

13 view
ஹோமாகம, திபாங்கொட பிரதேசத்தில் தனது இரண்டு மகள்களையும், ஒரு மகனையும் பல வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தை ஒருவரை கைது செய்துள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபரின் மனைவி பத்து வருடங்களுக்கு முன்னர் பிள்ளைகளை விட்டுச் சென்றதால் 13 வயது மகன், 16 வயது இளைய மகள் மற்றும் 24 வயது மூத்த மகள் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், சந்தேக நபரான தந்தையால் பல வருடங்காளாக இரு மகள்களும். 13 வயது மகனும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்படி, பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று வீட்டுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மூவரிடமும் விசாரணை நடத்தியதில், சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தந்தை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
The post மகள்களையும், மகனையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース