திருமலையில் அதிகரிக்கும் புற்றுநோயாளர்கள்- சுகாதார அமைச்சரிடம் இம்ரான் எம்.பி விடுத்த கோரிக்கை!
7 view
திருகோணமலை மாவட்டத்தில் ஒரு பொது வைத்தியசாலையும் ‘A’ தரத்திலான நான்கு தள வைத்தியசாலையும் ஏனைய வைத்தியசாலைகளும் காணப்படுகின்றன. கிண்ணியா, மூதூர், புல்மோட்டை வைத்தியசாலைகள் கடந்த காலங்களில் தரமுயர்த்தப்பட்டாலும் தேவையான போதுமான வசதிகள் தற்போது குறைவாகவே காணப்படுகின்றது. பொறுப்பான அமைச்சர் அதற்கான வசதிகளை பெற்றுத்தருவதை உறுதிப்படுத்தவேண்டும் என சுகாதார அமைச்சு சம்பந்தமான குழுநிலை விவாதத்தில் பாராளுமன்றில் உரையாற்றும் போது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிண்ணியா வைத்தியசாலை தற்போது இட பற்றாக்குறையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது, அங்கு X-Ray இயந்திரம் கிடைக்கப்பெற்ற போதிலும் X-Ray பிரிவினை ஆரம்பிக்கமுடியாத நிலை காணப்படுகிறது. இதனால் அங்கு வருகின்ற நோயாளிகள் பல கிலோமீட்டர் சென்று சிகிச்சைபெறவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இதனால் அரசாங்கம் அவசரமாக X-Ray பிரிவினை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவகம் அதிகூடிய சனத்தையும் பிரதேசத்தையும் கொண்டு காணப்படுகின்றமையால் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினை தோப்பூர்…
The post திருமலையில் அதிகரிக்கும் புற்றுநோயாளர்கள்- சுகாதார அமைச்சரிடம் இம்ரான் எம்.பி விடுத்த கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலையில் அதிகரிக்கும் புற்றுநோயாளர்கள்- சுகாதார அமைச்சரிடம் இம்ரான் எம்.பி விடுத்த கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
